8 சதவீத வளர்ச்சி உறுதி!: பிரதமர்
டெல்லி: நாட்டின் பொறுளாதாரம் ஆட்டம் கண்டுவிடுமோ என மக்கள் நம்பிக்கையிழந்து காணப்படும் இந்தச் சூழலில் ஒரு நம்பிக்கைச் செய்தியை அளித்துள்ளார் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்.
இந்த ஆண்டு எப்பாடுபட்டாவது 8 சதவிகித வளர்ச்சியை எட்டுவோம் என்பதே அந்தச் செய்தி.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் நேற்று கலந்து கொண்ட அவர் பேசியதாவது:
இந்தியப் பொருளாதாரம் தனிச் சிறப்பு வாய்ந்த்து. சர்வதேச கூறுகளில் பல நமக்குப் பொருந்தாதவை. நமது பொருளாதார வளர்ச்சி சில சின்னச்சின்ன தடங்கல்களைச் சந்தித்தாலும் நிச்சயம் வளர்ச்சிப் பாதையில்தான் நடைபோடும். அதற்கான முழு வேகத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த மாதிரி ஒரு பொருளாதார நெருக்கடி வரும் என்று கடந்த பட்ஜெட்டின்போதே எதிர்பார்த்தோம். அதன் விளைவுதான் விவசாயிகளுக்கு அதிக சலுகைகள் வழங்கி பணப் புழக்கத்தை தாராளமாக்கி வந்தோம். நாட்டின் உள் கட்டமைப்பை பல மாதங்களுக்கு முன்பிருந்தே பலப்படுத்தத் துவங்கிவிட்டோம்.
இன்னொன்று, இந்த பொருளாதார மந்தம் சாதாரண மக்களை நிச்சயம் பாதிக்கக் கூடாது. சர்வதேச நிதி அமைப்புகள் அதற்கேற்ற முன் முயற்சிகளை எடுக்க வேண்டும்.
இப்போது சிக்கலான சூழ்நிலைதான். ஆனால் அந்தச் சவாலை முறியடிக்க நாம் ஒன்றுபடுவோம். தொழில்துறையின் முழு ஒத்துழைப்பு அதற்குத் தேவை. அதேநேரம், பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில்களை சிக்கலிலிருந்து மீட்க அரசு முயற்சி எடுத்து வருகிறது, என்றார் மன்மோகன் சிங்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications