சீமான்-அமீர் ஜாமீன் ரத்து கோரிய மனு தள்ளுபடி
மதுரை: இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்ய்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ராமேஸ்வரத்தில் நடந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் போராட்டத்தின்போது பேசியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் இயக்குநர்கள் சீமானும், அமீரும்.
நிபந்தனை ஜாமீனின்படி மதுரையில் தங்கி அவர்கள் கையெழுத்திட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்களது ஜாமீனை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி கே.என். பாஷா, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் பிறப்பித்த உத்தரவில், கீழ் நீதிமன்றம் அளித்துள்ள ஜாமீன் சரியானதுதான்.
சாட்சியைக் கலைத்தார், தலைமறைவானார் என்று ஏதாவது காரணம் இருந்தால் ஜாமீனை ரத்து செய்யலாம். ஆனால் இயக்குநர்கள் இருவரின் விஷயத்திலும் அப்படி எதுவும் இல்லை. அதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை.
எனவே இயக்குநர்களுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை.
இருப்பினும் இரு இயக்குநர்களும், தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து டிவிக்கோ அல்லது பத்திரிகைகளுக்கோ பேட்டி எதுவும் அளிக்கவோ, பேசவோ கூடாது என்று கூறியிருந்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications