மலேசியா-அரசு வேலையில் தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பு

இதன் மூலம தற்போது உள்ள 3.4 சதவீதம் என்ற இட ஒதுக்கீடு இனிமேல் 7 சதவீதமாக இருக்கும்.
இதுதொடர்பான முடிவை பிரதமர் அப்துல்லா படாவி நேற்று எடுத்ததாக மனித வளத்துறை அமைச்சர் டி.எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
மலாய் இனத்தவர்களுக்கு சமமாக தங்களுக்கும் உரிமை வேண்டும் என மலேசியா வாழ் வம்சவாளி இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் கோரி வருகின்றனர். இது தொடர்பாக அங்கு போராட்டங்களும் நடைபெற்றன. இந்தப் போராட்டத்தை இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹின்ட்ராப்) மேற்கொண்டது என்பது நினைவிருக்கலாம்.
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் தாங்கள் இரண்டாம்பட்சமாக நடத்தப்படுவதைக் கண்டித்து கோலாலம்பூரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் நினைவிருக்கலாம்.
இந்தப் பின்னணியில், அரசு வேலைவாய்ப்பில், இந்திய வம்சாவளியினருக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடு 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் சுப்ரமணியம் கூறுகையில், இதுதவிர அரசு வேலைக்கு விண்ணப்பிப்போரின் மனுக்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையிலேயே பரிசீலிக்கப்படும் எனவும் பிரதமர் படாவி உறுதியளித்துள்ளார் என்றார்.
பிரதமர் நடத்திய இந்தக் கூட்டத்தில், இட ஒதுக்கீடு தவிர, பதவி உயர்வு, தமிழ் பள்ளிகளின் பிரச்சினைகள், குழந்தைகளுடன் தனித்து வசிக்கும் தாய்மார்களின் பிரச்சினகைள், இந்தியர்களுக்கான வர்த்தக வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் சுப்ரமணியம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் படாவி வெளியிட்ட ஒரு அறிக்கையில், அரசுப் பணிகளில், இந்திய வம்சாவளியினரை குறைந்தது 7 சதவீத அளவுக்கு எடுக்க வேண்டும் என்ற உத்தரவு, அரசுப் பணிகள் தேர்வாணையத்திற்கு அனுப்ப்பபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது மலேசிய அரசு வேலைகளில் பெரும்பாலும் மலாய் இனத்தவரே அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications