சோமாலியா கடற் கொள்ளையர்களிடமிருந்து மீண்டு நாடு திரும்பிய கப்பல் ஊழியர்கள்
மும்பை: சோமாலியா கடற் கொள்ளையர்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த ஐந்து கப்பல் ஊழியர்களும் இன்று மும்பை வந்து சேர்ந்தனர்.
கிட்டத்தட்ட 2 மாதங்கள் அவர்கள் கடற் கொள்ளையர்களின் பிடியில் சிக்கித் தவித்தனர்.
எம்.டி. ஸ்டோல்ட் வேலர் என்ற கப்பலை கடந்த செப்டம்பர் 15ம் தேதி சோமாலியா கடற் கொள்ளையர்கள் சிறை பிடித்தனர். அந்தக் கப்பலில் இருந்த 22 ஊழயர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். அனைவரும் சோமாலியாவில் உள்ள எயில் துறைமுகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களுடன் பேச்சு நடத்தப்பட்ட பெரும் தொகை கொடுக்கப்பட்டது. இதையடுத்து கப்பல் ஊழியர்களை சோமாலியா கடற் கொள்ளையர்கள் விடுவித்தனர்.
விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள் 18 பேர் இந்தியர்கள் ஆவர். இவர்களில் நவீத் புரந்தோகர், இசிதோர் பெர்னாண்டஸ், அலிஸ்டர் பெர்னாண்டஸ், ஓம் பிரகாஷ் சுக்லா, சந்தோஷ் பாட்டீல் ஆகியோர் இன்று மஸ்கட் வழியாக மும்பை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தில் ஐந்து பேரின் குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீர் மல்க அவர்களை வரவேற்றனர்.
விரைவில் மற்ற இந்தியர்களும் மஸ்கட்டிலிருந்து அவரவர் ஊர்களுக்கு வந்து சேருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியாவிலிருந்து மீண்டு தாயகம் திரும்பியுள்ள இசிதோர் கூறுகையில், நாங்கள் சிறை பிடிக்கப்பட்டது முதல் பதட்டத்துடனேயே இருந்தோம். கப்பலிலேயே நாங்கள் தங்க வைக்கப்பட்டோம். கடற் கொள்ளையர்களின் பிடியில்இருந்தபோது நான் நான்கு முறை எனது குடும்பத்தினருடன் பேச முடிந்தது என்றார். இவர் கப்பலின் தலைமை சமையல் காரராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அவர் கூறுகையில், கடந்த காலங்களில் நான் பலமுறை ஏடன் வளைகுடா வழியாக பயணப்பட்டுள்ளேன். ஐந்து கப்பல்களி்ல் நான் பயணித்துள்ளேன். ஆனால் இப்போதுதான் இப்படி ஒரு மோசமான அனுபவம் கிடைத்தது.
கப்பலில் உள்ள பாலம் போன்ற பகுதியில் எங்களை தினசரி உட்கார்த்தி வைத்து விடுவார்கள். கடற் கொள்ளையர்களுக்கு 9 நாட்கள் நான்தான் உணவு சமைத்துக் கொடுத்தேன். பிறகு வேறு சமையல்காரரை அவர்கள் ஏற்பாடு செய்து கொண்டனர்.
பிணையாட்களாக இருந்த காலத்தில், அனைவருக்கும் சிறிதளவே உணவு கிடைத்தது. இருப்பினும் போதுமான அளவில் உணவு கிடைத்தது என்றார்.
அலிஸ்டர் கூறுகையில், 24 மணி நேரமும் நாங்கள் துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்தோம். கடற் கொள்ளையர்களின் அனுமதி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications