இஸ்ரோவின் அடுத்த இலக்கு செவ்வாய் கிரகம்!
கொச்சி: சந்திராயன் திட்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்து செவ்வாய்க்கும் விண்கலம் அனுப்புவதற்கான முயற்சிகளில் இஸ்ரோ ஈடுபடும் என இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
குருவாயூர் செல்வதற்காக கொச்சி வந்த மாதவன் நாயர் அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், செவ்வாய் கிரக பயணம் தொடர்பான ஆய்வுகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. பூர்வாங்க ஆய்வை முடிக்க நான்கு ஆண்டுகள் ஆகும்.
சந்திராயன் விண்கலத்துடன் இணைத்து அனுப்பப்பட்டிருந்த இரண்டு அமெரிக்க சாதனங்கள் 2 நாட்களுக்கு முன்பு இயக்கி வைக்கப்பட்டன.
அதிலிருந்து பெறப்படும் தகவல்கள் இன்னும் ஒரு வாரத்தில் நமக்கு கிடைக்கும். இன்னும் இரண்டு சாதனங்களை நாம் இயக்க வேண்டியுள்ளது. விரைவில் அவையும் இயக்கி வைக்கப்படும்.
சந்திராயனில் உள்ள மூன் இம்பாக்ட் பிராப், கேமரா, 5 மீட்டர் ரெசலூஷனில் நமக்குப் புகைப்படங்களை அனுப்பியுள்ளது. இவ்வளவு துல்லியமான கேமராவை பயன்படுத்தியிருக்கும் முதல் நாடு நாம்தான். இதற்கு முன்பு ஜப்பானின் 10 மீட்டர் ரெசலூஷன் கேமராதான் சிறந்ததாக இருந்தது.
சந்திராயன் -1 பயணம் முழு வெற்றி அடைந்துள்ளது. அதுதொடர்பான அனைத்து முக்கியப் பணிகளும் முழுமையை அடைந்து வருகின்றன என்றார் நாயர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications