3 வீடுகளில் 135 பவுன் நகைகள் கொள்ளை
ஈரோடு: ஈரோடு அருகே பட்டபகலில் 3 வீட்டின் பூட்டுகளை உடைத்து 135 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகே காளிங்கராயன் பாளையம் முதலி தோட்டத்தைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மனைவி கலைவாணி.
இவர்கள் வீட்டை பூட்டி விட்டு உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்ற நேரத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும் வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 100 பவுன் நகைகள் மற்றும் ரூ 50 ஆயிரம் ரொக்கம் ஆயவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதே போன்று அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர் விஸ்வநாதன். இவரது மனைவி விஜயா. இவர்கள் தங்களது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்ற தருணத்தில் அந்த வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள், ரொக்கப்பணம் ரூ 30 ஆயிரம் ஆகியவைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதே போன்று காளிங்கராயன் பகுதியைச் சேர்ந்த கல்பனா என்பவர் வீட்டில் 10 பவுன் நகைகள், ரொக்கப் பணம் ரூ 5,000 ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் பட்டபகலில் மூன்று வீடுகளில் கொள்ளை நடந்துள்ளதால் அருகில் வசிக்கும் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.
-
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு












Click it and Unblock the Notifications