எஸ்.பி. வீடு எதிரே துணிகரம்-பெட்ரோல் குண்டு வீச்சு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. வீட்டுக்கு எதிரே உள்ள ஒருவரது வீட்டில் இன்று அதிகாலை ஒரு மர்ம கும்பல், பெட்ரோல் குண்டை வீசி விட்டுத் தப்பியது. இதில் அந்த வீட்டில் இருந்த நான்கு பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் பாஸ்ட் புட் கடை வைத்திருப்பவர் குமார் (40) இவரது வீடு காஞ்சிபுரம் எஸ்.பிய வீட்டுக்கு எதிரே உள்ளது. இவரது மனைவி தனலட்சுமி (30), இவர்களுக்கு சாந்தன் (12), மோனிஷ் (8) என இரு மகன்கள் உள்ளனர்.
இன்று அதிகாலை இவர்களது வீட்டுக்கு ஒரு மர்ம கும்பல் வந்தது. வீட்டின் வெளிக் கதவை உடைத்து விட்டு உள்ளே நுழைந்த அக்கும்பல், சமையலறை ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்தது.
பின்னர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குமார் குடும்பத்தினர் மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது.
அதன் பின்னர் அக்கும்பல் தாங்கள் வந்த காரில் ஏறித் தப்பி விட்டனர்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், வீடு தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். காயமடைந்த நிலையில் இருந்த நான்கு பேரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு நால்வரும் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
பெட்ரோல் குண்டு வீச்சில் வீட்டின் பெரும் பகுதி சேதமடைந்து விட்டது.
முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
எஸ்.பி. பெரியய்யாவின் வீட்டுக்கு எதிரே நடந்த இந்த துணிகர சம்பவத்தால் காஞ்சிபுரம் நகரில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications