போலி ஆவணம்-லாட்ஜில் சிக்கிய இலங்கை தமிழர்கள்
சென்னை: சென்னை லாட்ஜ் ஒன்றில், போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த 6 இலங்கைத் தமிழர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் விடுதலைப் புலிகளா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, ஜாம்பஜார் சுபத்ரா தெருவில் உள்ள ஜம் ஜம் லாட்ஜில் போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள ஒவ்வொரு அறையாக சென்று தங்கியிருந்தவர்களிடம் ஊர், பெயர், தங்கியிருப்பதற்கான காரணம், எவ்வளவு நாட்கள் தங்கி உள்ளனர் என்பன போன்ற விபரங்களை கேட்டு அறிந்தனர்.
அப்போது லாட்ஜில் உள்ள 2 அறைகளில் தலா 3 பேர் வீதம் மொத்தம் 6 இலங்கை தமிழர்கள் தங்கி யிருந்தனர்.
விசாரணையில், அவர்கள் 6 பேரும் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்ததும், விசாக் காலம் முடிந்தும் இங்கு தொடர்ந்து தங்கியிருப்பதும் தெரிய வந்தது.
இவர்கள், வேளச்சேரி, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தங்களது பெயர், விவரங்களைப் பதிவு செய்துள்ளனர்.
விசா காலம் முடிந்ததும் நாடு திரும்பியது போல் தெரிய வேண்டும் என்பதற்காக அங்கிருந்து புறப்பட்டு ஜாம்பஜார் லாட்ஜூகளில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடமிருந்து போலியான ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலை விஷயமாக லண்டன் செல்வதற்காக இந்தியா வந்தோம் என குறிப்பிட்ட அவர்களின் பதில் போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
6 பேரும் விடுதலைப்புலிகளாக இருக்கலாம் என சந்தேகித்தனர். இதையடுத்து கியூ பிராஞ்ச் மற்றும் உளவுப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தார்கள்.
இதையடுத்து இரு பிரிவு போலீஸாரும் கிட்டத்தட்ட 14 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஆறு பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!












Click it and Unblock the Notifications