தீவிரவாதி கஸாவிடம் எப்பிஐ-இஸ்ரேல் அதிகாரிகள் விசாரணை

இதுவரை அவனிடம் இந்திய உளவுப் பிரிவான ஐ.பி, வெளிநாட்டு உளவுப் பிரிவான ரா, மும்பை தீவிரவாதத் தடுப்பு போலீசார், ராணுவ உளவுப் பிரிவினர் ஆகியோர் மட்டுமே விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஏகப்பட்ட விஷயங்களைக் கக்கிவிட்டான் கஸாவ்.
இந் நிலையில் இந்தியா வந்துள்ள எப்பிஐ மற்றும் இஸ்ரேலிய உளவுப் பிரிவினரும் அவனிடம் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விசாரணைகள் குறித்து நாங்கள் தரும் தகவல்களை விட நேரில் அவனிடமே விசராணை நடத்தி பாகிஸ்தானின் தொடர்புகள் குறித்து விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அமெரிக்காவிடம் இந்தியா கூறிவிட்டது.
முன்னதாக தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் அமெரிக்கர்கள் பலியானது குறித்து எப்பிஐயும் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கஸாவ் எந்த இடத்தில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறான் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று முக்கிய நாடுகளின் தூதர்களை அழைத்து இந்திய வெளியுறவு அதிகாரிகள் கஸாவிடம் இருந்து கிடைத்த தகவல்களை அளித்தனர். பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளிடம் தாங்கள் பெற்ற பயிற்சி, இந்தப் பயிற்சியில் ஐஎஸ்ஐயின் பங்கு ஆகியவை குறித்து கஸாவ் கூறிய விவரங்களை இந்த நாடுகளிடம் இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications