சனி வக்ர பெயர்ச்சி 2026: மேஷம், ரிஷபம், மிதுன ராசிகளுக்கு 138 நாட்கள் எப்படி இருக்கும்?
சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 11 ஆம் தேதி கார்த்திகை மாதம் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். கிட்டத்தட்ட 138 நாட்கள் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்கிறார். வக்ரகதி நடப்பதால் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
சனி பகவான் மந்த காரகன், நீதிமான் மற்றும் கர்ம வினைகளைத் தீர்ப்பவர் என்று போற்றப்படுகிறார். மனிதன் தன் வாழ்வில் செய்யக்கூடிய நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப எந்தவித பாரபட்சமுமின்றி பலன்களை வழங்குபவராக சனி பகவான் விளங்குகிறார். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பலனை அளிப்பதால் சனிப்பெயர்ச்சி, சனி வக்ர நிலைகள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

சனி வக்ர பெயர்ச்சி
அந்த வகையில், வரும் ஜூலை 27 ஆம் தேதி முதல் சனி பகவான் வக்ர கதி அடைந்து பயணிக்கவுள்ளார். இந்த கிரக மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சனி வக்ர நிலையில் இருக்கும் காலத்தில் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே, அதிகரிக்கும் 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உறவுகள், தனிப்பட்ட முன்னேற்றத்தில் பல்வேறு விதமான பலன்கள் காணப்படும்.
அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு சனி வக்ரம் பெற்றுள்ளதால் இதுவரை ஏழரை சனியாக இருந்தவர் இப்போது அதிலிருந்து விடுபட்டு, 11 ஆம் இடத்திற்குண்டான பலன்களை கொடுக்கப் போகிறார். 12 ஆம் இடத்திற்கு சனி வருவதால் நிறைய தூக்கத்தை கெடுத்திருப்பார். வேலைப் பளு, தூக்கமின்மை, இரவு நேரத்தில் குடும்பத்தில் சண்டை என பல கோணங்களில் இதுவரை தூக்கத்தை இழந்திருப்பீர்கள்.
இனி வரக்கூடிய 138 நாட்களில் அற்புதமான தூக்கத்தைப் பெறுவீர்கள். விடுதலை பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். 11 ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் அந்த இடம் கெட்டுப் போகாது. பெற்றோர்கள் பிள்ளைகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் திருமணம், படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்ற விஷயங்களில் கவனமாக முடிவெடுக்க வேண்டும்.
பண வரவு அற்புதமாக இருப்பதால் பிள்ளைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள். மிகப்பெரிய லாபங்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துகள் கிடைக்கும். குலதெய்வ கோயில்களுக்குச் சென்று வருவது, பிள்ளைகள் சார்ந்த முடிவுகளை எடுக்கும் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது ஏற்றத்தைக் கொடுக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சியைக் கண்டு பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு 11 ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 10 ஆம் இடத்திற்கான ஆதிபத்தியத்தை பெறுகிறார். 10 ஆம் இடம் பெரியளவில் பாதிக்கப்படாது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு எந்த வித பாதிப்புகளும் ஏற்படாது. சொந்த தொழில் செய்வதற்கான திட்டமிடுவோருக்கு அற்புதமான காலகட்டம். 10 ஆம் இடம் என்பது கர்மகாரியத்தை குறிக்கக் கூடியது. உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியில் 100 சதவீத ரிசல்டை கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்யும் அமைப்பு ஏற்படும். பொறுப்புகள் கூடும். நிறைய பாரமான விஷயங்கள் உங்கள் மேல் திணிக்கப்படும். என்ன செய்தாலும் பத்தவில்லை என்று உங்களை குறைசொல்ல ஆரம்பிப்பார்கள். உங்களை டென்ஷனாக்கி எமோஷலனாக பேச வைப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் பொறுமை, நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.
மாணவர்களுக்கு படிப்பில் கவனக்குறைவு ஏற்படும். உடல்நல பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தாயின் உடல்நிலையில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. முட்டி வலி, முழங்கால் வலி, மேல் வயிறு பிரச்சனை, இருதய கோளாறு போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. 10 ஆம் பார்வையாக ராசிக்கு 7 ஆம் இடத்தைப் பார்ப்பதால் கணவன், மனைவி, குடும்ப உறவில் நிதானம் அவசியம். கணவன், மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் பொறுமையை கையாளுவது அவசியம்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு வக்ர சனியாக இருக்கக்கூடியவர் 9 ஆம் இடத்தில் அமர்கிறார். 9 ஆம் இடத்தில் இருந்து கொண்டு 11 ஆம் இடத்தைப் பார்ப்பதால் வரும் லாபங்களை சேமித்து வைத்துக் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். செலவுகளைக் குறைத்து கொள்ள வேண்டும். பணம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாகவும் கறாராகவும் இருக்க வேண்டும்.
தேவையில்லாத செலவுகளைக் கண்டிப்பாக குறைத்துக் கொள்ள வேண்டும். வாகனங்களால் தேவையில்லாத செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. முன் சகோதரர்கள், வயதில் மூத்தவர்கள், வேலை பார்க்கும் இடத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. அச்சப்படவும் தேவையில்லை.
சிலருக்கு நல்ல இடமாற்றங்கள் உண்டாகும். தூரமான பகுதிகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும். விவசாயம் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். இயற்கைத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். மிதுனத்திற்கு 3 ஆம் இடத்தை சனி பகவான் பார்க்கிறார். சனி 3 ஆம் பார்வையால் முயற்சிகளில் நிறைய தொய்வுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
உள்ளார்ந்த வேகம், விவேகம் குறைவதற்கான வாய்ப்புள்ளது. எதிரிகள், நோய்கள், கடன்கள், சட்டம், வழக்கு, துன்பம் போன்றவற்றை தவிர்ப்பதற்கோ, விலகி செல்வதற்கோ வாய்ப்புகள் வந்து சேரும். நீதிமன்றம், வழக்கு என்று அழைந்து கொண்டிருந்தவர்கள் இந்த காலகட்டத்தில் அமர்ந்து பேசி பிரச்சனையை தீர்ப்பீர்கள். உறவுகளுடனான பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும்.












Click it and Unblock the Notifications