விபச்சார பெண்ணுடன் 'குஜால்'-எஸ்ஐ சஸ்பெண்ட்!
சிவகாசி: சிவகாசியில் விபச்சார அழகியுடன் கும்மாளம் போட்ட போலீஸ் எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சிவகாசி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் குருசாமி. இவர் போலீஸ் குடியிருப்பில் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந் நிலையில் வழக்கு ஒன்றிக்கு காவல் நிலையம் வந்த ராணி என்ற விபச்சார அழகியுடன் குருசாமிக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால் ராணியுடன், குருசாமி அடிக்கடி வெளியூர் செல்வதும், சினிமாவுக்கு செல்வதுமாக இருந்துள்ளார்.
மேலும் குருசாமி தான் தங்கியுள்ள போலீஸ் குடியிப்பு வீட்டுக்கே ராணியை அடிக்கடி அழைத்து வந்து குஷியாக இருந்துள்ளார்.
இந்தத் தகவல் அக்கம் பக்கத்தில் உள்ள போலீசாரின் வீடுகளுக்குப் பரவவே போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து டிஐஜி கிருஷ்ணமூர்த்தி சப்- இன்ஸ்பெக்டர் குருசாமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications