மும்பை தீவிரவாத தாக்குதலை ஒருங்கிணைத்த லஷ்கரின் லக்வி

லண்டனைச் சேர்ந்த ஆசியா பசிபிக் பவுன்டேஷனின் பாதுகாப்பு திறனாய்வாளர்களான கோஹல் மற்றும் சஜ்ஜன் கோஹல் ஆகியோர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது...
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் 10 பேர்தான் ஈடுபட்டார்கள் என்று மும்பை போலீஸார் கூறுவது தவறு. மொத்தம் 15 பேர் இதில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் கடத்தி வந்த மீன் பிடி படகில் 15 பேருக்கான உடைகள் உள்ளிட்டவை இருந்தன. எனவே பத்து பேர் மும்பைக்குள் வந்துள்ளனர். மற்ற 5 பேரும் தலைமறைவாகியிருக்கிறார்கள்.
ஒருங்கிணைத்த லக்வி
மும்பை தாக்குதலை எப்படி நடத்த வேண்டும் என்பதை ஒருங்கிணைத்துக் கொடுத்தவர் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் 'கமாண்டரான' ஜாகி உர் ரஹ்மான் லக்வி.
இவர் கராச்சியில் 3 மாதங்கள் தங்கி, தாக்குதலை நடத்தும் விதம் குறித்து தீவிரவாதிகளுக்கு விளக்கி அவர்களை ஒருங்கிணைத்துள்ளார்.
மேலும் தாஜ், ஓபராய் ஹோட்டல்களை தீவிரவாதிகள் முற்றுகையிட்ட பின்னர் தங்களிடமிருந்த செல்போன்கள் மூலம் பாகிஸ்தானில் உள்ள தங்களது கமாண்டர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது வழிகாட்டுதலின்படி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
எம்.வி. குபேர் மீன் பிடி படகில் தீவிரவாதிகள் விட்டுச் சென்ற சாட்டிலைட் போனில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த (மும்பை சம்பவத்திற்கு இவர்தான் மூளையாக கருதப்படுகிறார்) யூசுப் முஸ்ஸமிலின் எண்களுக்கு தீவிரவாதிகள் பலமுறை பேசியிருப்பது அந்த சாட்டிலைட் போனில் உள்ளது.
இந்த எண்களும், தாஜ், ஓபராய் ஹோட்டல்களில் கண்டெடுக்கப்பட்ட தீவிரவாதிகளின் செல்போன்களில் உள்ள எண்களும் ஒன்றுதான் என்று அந்த செய்தி கூறுகிறது.
யார் இந்த லக்வி?
லக்வி, பாகிஸ்தானைச் சேர்ந்தவர். லஷ்கர் இ தொய்பாவை நிறுவியவர்களில் ஒருவர். ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவின் செயல்பாடுகளை இவர்தான் கவனித்து வருகிறார்.
லஷ்கர் இ தொய்பா அமைப்பின் ஜெனரல் கவுன்சிலின் உறுப்பினராகவும் இவர் இருக்கிறார்.
இவருக்கு அப்துல்லா ஆஸம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications