என்.எஸ்.ஜி. பாதுகாப்பு: அத்வானிக்கு லாலு சவால்
பாட்னா: என்.எஸ்.ஜி கமாண்டோ பாதுகாப்பு வேண்டாம் என்று பாஜக தலைவர் அத்வானி கூறினால், நானும் எனது என்.எஸ்.ஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்கிறேன் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாட்னாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்.கே.அத்வானி தனது என்.எஸ்.ஜி. பாதுகாப்பை வேண்டாம் என்று கூறினால் நானும் எனது என்.எஸ்.ஜி. பாதுகாப்பை விலக்கிக் கொள்ளத் தயார்.
பொருத்தமில்லாத தலைவர்களுக்கெல்லாம் என்.எஸ்.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறுகிறார். முதலில் அவர் அத்வானியிடம் போய் இதைச் சொல்லட்டும். அவருடைய என்.எஸ்.ஜி. பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறு அட்வைஸ் செய்யட்டும் என்றார் லாலு.
லாலுவின் இந்தப் பேச்சு குறித்து நிதீஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, லாலு பிரசாத் யாதவ் பேசுவதையெல்லாம் ஏன் என்னிடம் வந்து சொல்கிறீர்கள்?, எனது கருத்தைக் கேட்கிறீர்கள்?.
24 மணி நேரமும் எதையாவது மீடியாக்கள் மெல்வதற்கு கொடுத்துக் கொண்டிருப்பதுதான் லாலுவின் வேலை. அதற்கெல்லாம் நான் பதிலளிக்க முடியுமா? என்றார் கோபமாக.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications