கிளிநொச்சி: புலிகளின் நிலைகள் மீது கடும் விமானத் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
கிளிநொச்சி: இலங்கையில் போர் உக்கிரமடைந்துள்ளது. கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.
இந்தத் தாக்குதலில் 12க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியைப் பிடிக்க பல முனைகளிலும் ராணுவம் முன்னேறி வருகிறது. விமானப்படை உதவியுவுடன் தொடர் தாக்குதலில் அது ஈடுபட்டுள்ளது.
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இலங்கை விமானப்படை விமானங்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தின. இதில் 12க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றன.












Click it and Unblock the Notifications