புது வீடு-2 குழந்தைகளை நரபலி கொடுத்த தந்தை
செய்யார்: கட்டி வரும் புது வீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நலமாக வாழ்வதற்காக தான் பெற்ற இரு குழந்தைகளை கழுத்தை அறித்து கொடூரமாகக் கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெள்ளாமலை கிராமத்தை சேர்ந்தவர் செல்லன் (32), விவசாயி. இவருக்கும் கன்னியம்மாள் (25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரோகிணி (3) என்ற மகளும், இளங்கோ (1) என்ற மகனும் உள்ளனர்.
செல்லன் அவருக்கு சொந்தமான குடிசை வீட்டின் முன்பு காலியாக உள்ள இடத்தில் வீடு ஒன்று கட்டி வருகிறார். நேற்று காலை 10 மணியளவில் கன்னியம்மாள் அருகே உள்ள குளத்திற்கு துணி துவைக்க சென்றார்.
சிறிது நேரத்தில் செல்லன் குடிசை வீட்டுக்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த மகன் இளங்கோ மற்றும் மகள் ரோகிணி ஆகிய இருவரின் கழுத்தை அறுத்தார். இதில் 2 குழந்தைகளும் துடிதுடித்து இறந்தனர்.
இந்த நிலையில் வெளியில் சென்று இருந்த செல்லனின் தாய் முனியம்மாள் வீட்டிற்கு வந்தபோது குடிசை வீட்டில் இருந்து செல்லன் ரத்தம் வடியும் கத்தியுடன் வெளியே வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 2 குழந்தைகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது கண்டு கதறி அழுதார். அதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு வந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்லன் கைது செய்யப்பட்டார். பெற்ற குழந்தைகளை இப்படிக் கொடூரமாகக் கொன்றதற்கு என்ன காரணம் என்று அவரிடம் போலீஸார் கேட்டபோது, கட்டிவரும் புதிய வீட்டில் நன்றாக வாழவேண்டும் என்றால் குழந்தைகளை பலி கொடுக்க வேண்டும் என்று காளி தன் மீது இறங்கி கூறியதன் பேரில் குழந்தைகள் இருவரையும் பலி கொடுத்தேன் என்று கூறியுள்ளார் செல்லன்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications