காஷ்மீரில் இன்று 5வது கட்ட வாக்குப்பதிவு
Subscribe to Oneindia Tamil
ஜம்மூ: காஷ்மீரில் இன்று ஐந்தாவது கட்ட சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவு நடந்தது.
மொத்தம் 7 கட்டமாக நடக்கும் இந்தத் தேர்தலில் இதுவரை 4 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன. இன்று 11 தொகுதிகளுக்கு மிக பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடந்தது.
இதி்ல் 5 பெண்கள் உள்பட 179 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 8 லட்சம் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். தீவிரவாதிகள் நடமாட்டம் மிக மிக அதிகமுள்ள சோபியான், டிரால் ஆகிய தொகுதிகளிலும் இன்று வாக்குப் பதிவு நடந்தது.
ராணுவம், மத்திய பாராமிலிட்டரிப் படைகள், போலீசார் குவிக்கப்பட்டு மிகுந்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்தது. கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக வாக்குப்பதிவு மந்தமாகவே தொடங்கியது.
87 உறுப்பினர்களை கொண்ட காஷ்மீர் சட்டப்பேரவைக்கு இன்னும் இரண்டு கட்ட தேர்தல் நடக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications