தம்பியை பழிவாங்க ரயில் நிலையங்களுக்கு குண்டு மிரட்டல்?
சென்னை: நேற்று முன் தினம் இரவு சென்னை க்யூ பிரிவு போலீஸ் ஐ.ஜி சங்கர் ஜூவாலின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில், சென்னை எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள் திருச்சி, மதுரை, கோவை ரயில் நிலையங்களில் இன்று காலை 9.30 மணிக்கு குண்டுகள் வெடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து மாநிலத்தின் அனைத்து ரயில் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. மிரட்டல் விடுக்கப்பட்ட எழும்பூர், தாம்பரம், திருச்சி, மதுரை, கோவை ரயில் நிலையங்கள் மட்டுமின்றி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் அனைத்திலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்து.
மொபைல் போன் மூலம் மிரட்டல் அனுப்பிய நபர் குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அந்த மொபைல் போன் தாம்பரத்தை சேர்ந்த வசந்த் என்பவருடையது தெரிய வந்தது.
அண்ணனுடையது...:
இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால், இது தனது அண்ணன் செல்வேந்திரன் என்பவருக்கு சொந்தமானது என்று வசந்த் தெரிவித்தார். எனது பெயரில் அண்ணன் தான் இந்த சிம் கார்டை வாங்கித் தந்தார். அதை இப்போது அவர் தான் பயன்படுத்தி வருகிறார் என்றார்.
தம்பி-மனைவி மீது சந்தேகத்தால் விபரீதம்?:
இதையடுத்து வசந்திடம் போலீசார் தீவிரமாக விசாரித்தபோது அவர் கூறியதாவது:
செல்வேந்திரனின் மனைவியிடம் நான் சகஜமாக பழகினேன். இதனால் அண்ணன் என் மீதும் தன் மனைவி மீதும் சந்தேகப்பட்டார். என்னை அடித்து உதைத்து விரட்டினார். அவரது மனைவியையும் தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.
என்னால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விட்டது என்று கூறி என்னை பழி வாங்காமல் விடமாட்டேன் என்று மிரட்டி வந்தார்.
இந்த நிலையில் தான் என்னை பழிவாங்குவதற்காக என் பெயரில் உள்ள சிம் கார்டு மூலம் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்றார்.
இதையடுத்து போலீசார் செல்வேந்திரனை தேடி திருச்சி சென்றனர். ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் பிடிபட்ட பிறகே வெடிகுண்டு மிரட்டலுக்கான உண்மை காரணம் தெரிய வரும்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications