'புஷ்-ஷூ': பெங்களூர் ஊழியர் அப்பாவி!
பெங்களூர்: பாக்தாத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூவை வீசிய ஈராக் நிருபர் முன்டாசர் அல் ஜய்தியை ஆதரித்துப் பேசியதற்காக கைது செய்யப்பட்ட பெங்களூர் நபர் அப்பாவி என்று தெரியவந்ததையடுத்து அவரை போலீஸார் விடுவித்துவிட்டனர்.
பெங்களூர் போஸ்ச் நிறுவனத்தின் கீழ் வரும் மோட்டார் இன்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜமீல் அகமத்.
இவர் தனது சக ஊழியர்களிடம் புஷ் மீது ஷூ வீசிய ஈராக் நிருபரைப் புகழ்ந்து பேசியுள்ளார். இதையடுத்து ஊழியர்கள் சிலர் போலீசுக்கு தகவல் தந்தனர். அவரை தீவிரவாதியகாவே சித்தரித்துவிட்டனர்.
இதையடுத்து போலீஸார் ஜமீலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், விசாரணையிலும் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையிலும் அவருக்கு எந்தத் தீவிரவாத அமைப்புடனும் தொடர்பி்ல்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து அவரை பெங்களூர் போலீசார் விடுவித்தனர்.
இது குறித்து போஸ்ச் துணைத் தலைவர் சுரேஷ் கூறுகையில், ஜமீல் அகமத் கடந்த 12 ஆண்டுகளாக இங்கு பணிபுரிகிறார். சிறந்த ஊழியர், அவரைப் பற்றி யாரோ தவறாக தகவல் தந்துள்ளனர். அதற்காக அவரை போலீசார் விசாரித்தது துரதிஷ்டவசமானது. அவருக்கும் தீவிரவாதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தவறான தகவல் கொடுத்து ஒருவரை சிக்கலில் மாட்டிவிடும் இது போன்ற செயல்கள் நியாயமல்ல. யாராக இருந்தாலும் நாம் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும், மதத்தை வைத்து ஒருவரை தொல்லையில் சிக்க வைப்பது முறையல்ல என்றார்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications