திருமங்கலம்: ஓ.பி. தலைமையில் அதிமுக பணிக்குழு
சென்னை: திருமங்கலம் இடைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பணி்க் குழுவை அமைத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் முத்துராமலிங்கம் போட்டியிடுகிறார். அவரது பிரச்சாரத்தை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனும் இடம் பெற்றுள்ளார்.
கட்சித் தொண்டர்கள் தேர்தல் பணிக் குழுப் பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் மகன் மு.கருணாநிதி:
திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கம் தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்த சொத்து மதிப்பு விபரம்:
என்னிடம் ஒரு லட்சம் ரூபாயும், மனைவியிடம் 20 ஆயிரம் ரூபாயும் கையிருப்பு உள்ளது. என் மகன் மு.கருணாநிதி பெயரில் 5,000 ரூபாய் வங்கியில் உள்ளது.
என் பெயரில் வங்கியில் 7,778 ரூபாய், மனைவி பூர்ணவள்ளி பெயரில் ஆயிரம் ரூபாய், மு.கருணாநிதி பெயரில் மோட்டார் சைக்சகிள் உள்ளன.
என்னிடம் 56 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 7 பவுன் நகை, மகள் மணிமேகலையிடம் 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், மகள் சூர்யாவிற்கு 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
கெளடா கட்சி ஆதரவு:
இதற்கிடையே இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக மதசார்பற்ற ஜனதா தளத்தின் பொதுச் செயலாளர் ஜான் மோசஸ் தெரிவித்துள்ளார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications