ராணுவ தளபதி தீபக் கபூர் சியாச்சின் விரைந்தார்

இன்று காலை கபூர் சியாச்சின் புறப்பட்டுச் சென்றார். அங்கு இன்று முழுவதும் அவர் தங்கியிருப்பார். அங்குள்ள படைப் பிரிவுகளின் கமாண்டர்கள், மூத்த ராணுவ அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவார். பின்னர் ஸ்ரீநகர் திரும்பி, ஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளின் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தியா தாக்குமோ என்ற பெரும் பீதி பாகிஸ்தானில் நிலவுகிறது. இதையடுத்து பாகிஸ்தான் விமானப்படை, ராணுவம் மற்றும் கடற்படையினர் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
எல்லைப் பகுதியில் ரேஞ்சர்களின் எண்ணிக்கையை பாகிஸ்தான் ராணுவம் அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்திய தரப்பிலும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானுடனான மேற்கு எல்லையில் இந்திய ராணுவ அணிகள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் விமானப்படையும் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடல் கண்காணிப்பையும் கடற்படை அதிகரித்துள்ளது நினைவிருக்கலாம்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர், பார்மர் மற்றும் பூஜ் ஆகிய பகுதிகளில் விமானப்படை பிரிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. பஞ்சாப் எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை உஷார் நிலையி்ல் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில்தான் ராணுவ தளபதி கபூர் காஷ்மீர் விரைந்துள்ளார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications