நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இயேசு பிரான் போதித்த அன்பு, மன்னிப்பு ஆகியவற்றை இந்த நாளில் நினைவுகூர்ந்து உலகில் சமத்துவம், சகோதரத்துவம் நிலவ உறுதி பூணுவோம் என்று கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்தியில், அன்பு, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, மனிதநேயம் ஆகியவற்றை உலகிற்கு அறிவுறுத்திய இயேசுவின் பிறந்தநாள் உலகெங்கும் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளை கொண்டாடிடும் கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில், உலகத்தை ஆட்கொள்ள வந்த இயேசு பிரானின் பிறந்த நாளை கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பாஜகவின் திருநாவுக்கரசர், டாக்டர் சேதுராமன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தேமுதிக சார்பில் காரைக்குடியில், நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மக்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேக் மற்றும் பிரியாணி வழங்குகிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications