பாகிஸ்தான் போரை விரும்பவில்லை: கிலானி
நவ்தேரா (பாக்.): தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி நிலவவே பாகிஸ்தான் விரும்புகிறது. இந்தியா போர் புரியக் கூடாது என உலக நாடுகள் அதை அமைதிப்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் சமாதிக்கு நேற்று கிலானி சென்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களிடம் போர்த் திட்டம் எதுவும் இல்லை. அமைதியையே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் எங்கள் மீது போர் திணிக்கப்பட்டால் அதை நாங்கள் கண்டிப்பாக எதிர்கொள்வோம். பதிலடி கொடுப்போம்.
பாகிஸ்தான் மீது போர் திணிக்கப்பட்டால், ஒட்டுமொத்த நாடும், அரசியல் தலைவர்களும், ஆயுதப் படைகளும் ஒருங்கிணைந்து நின்று நாட்டைக் காப்பார்கள். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.
நமது மதிப்புக்குரிய தலைவர் பெனாசிர் பூட்டோவோ, தீவிரவாதத்திற்குப் பலியானவர்தான். நமது நாடும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுதான். தீவிரவாதத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான்.
மும்பை தாக்குதல் சம்பவத்தை பாகிஸ்தான் மிகக் கடுமையான வார்த்தைகளால் கண்டித்தது. விசாரணைக்கு தேவையான முழு ஒத்துழைப்பை அளிக்கவும் தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்தது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.
இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவை மேற்கொள்ளவே பாகிஸ்தான் விரும்புகிறது. பாகிஸ்தான் மண்ணை யாரும், எந்த நாடும் தவறாக பயன்படுத்த பாகிஸ்தான் அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க சர்வதேச நாடுகள் உதவ வேண்டும். இந்தியாவிடம் பேசி பதட்டத்தைக் குறைக்க அவர்கள் முன்வர வேண்டும் என்றார் கிலானி.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications