காஸா முனையில் இஸ்ரேல் வெறித் தாக்குதல் - 205 பேர் பலி
ஜெருசலேம்: பாலஸ்தீனத்தின் காஸா முனையில், இஸ்ரேல் நடத்திய வெறித்தனமான குண்டு வீச்சில் 205 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
காஸா முனைப் பகுதியில் உள்ள, 40க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பின் நிலைகளையும், போலீஸ் தலைமையகத்தையும் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இஸ்ரேல் விமானப்படை சரமாரியாக குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.
காஸா முனை முழுவதையும் இஸ்ரேலியப் படைகள் சல்லடையாக துளைத்தெடுத்து விட்டன. இந்த கொலை வெறித் தாக்குதலில் 205 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
கடந்த சில வாரங்களாக காஸா முனைப் பகுதியிலிருந்து இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் பிரிவினர் ராக்கெட் வீசித் தாக்கி வந்தனர். இதையடுத்தே இஸ்ரேலியப் படைகள் கடும் தாக்குதலை தொடுத்துள்ளன. தேவைப்பட்டால் இது தொடரும் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை செய்திக்குறிப்பு கூறுகிறது.
ஹமாஸ் இயக்கத்தினரைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பெரும்பாலும் அப்பாவி மக்கள்தான் பலியாகியுள்ளனர்.
மேலும், ஹமாஸ் இயக்கத்தின் காவல்துறை தலைமையகமும் சீரழிந்து விட்டது. காஸா பகுதி போலீஸ் தலைவர் தெளபீக் ஜாபரும் இதில் உயிரிழந்தார் என தகவல்கள் கூறுகின்றன.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலை அதிகரிப்போம். இஸ்ரேலுக்குள் தற்கொலைப் படையினரை அனுப்புவோம் என ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பவ்சி போர்ஹாம் எச்சரித்துள்ளார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications