இலங்கை துப்பாக்கிச் சூடு-பாம்பன் மீனவர் படுகாயம்
ராமேஸ்வரம்: பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர், இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். இதனால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது.
மீண்டும் தனது அட்டூழியத்தைத் தொடங்கியுள்ளது இலங்கை கடற்படை. ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் இருந்த படகுகளை சுற்றி வளைத்த கடற்படையினர் வெறித்தனமாக தாக்கியுள்ளனர்.
துப்பாக்கிகளின் பின்பகுதியால் தாக்கியதால் மீனவர்கள் சிலர் காயமடைந்தனர். பின்னர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பாம்பனைச் சேர்ந்த ஒரு மீனவர் காயமடைந்தார்.
இதைத் தொடர்ந்து இனிமேல் இந்தப் பக்கம் வரக் கூடாது என எச்சரித்து விட்டு கடற்படையினர் சென்றனர்.
இதையடுத்து தமிழக மீனவர்கள் காயமடைந்த மீனவர்களுடன் கரைக்கு விரைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக மீனவர்களிடையே பதட்டம் நிலவுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications