மக்களவைத் தேர்தல்-தயாராகிறது அதிமுக

ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் ஒருவர் வீதம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை தேர்வு செய்ய மூத்த கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், ஆலோசகர் பொன்னையன், அமைப்புச் செயலாளர்கள் முத்துசாமி, செம்மலை, அவைத் தலைவர் மதுசூதனன், மீனவர் பிரிவுச் செயலாளர் ஜெயக்குமார், மருத்துவ அணி செயலாளர் டாக்டர் மைத்ரேயன் , மகளிர் பிரிவு செயலாளர் பி.வளர்மதி, முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட பல முன்னணி நிர்வாகிகளும் சென்னை உள்ளிட்ட சில மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.
இதில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் ஒருவர் வீதம் 39 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய சென்னைக்கு மதுசூதனன், வட சென்னைக்கு சுலோச்சனா சம்பத், தென் சென்னைக்கு பாலகங்கா, திருவள்ளூருக்கு ஜெயக்குமார், ஸ்ரீபெரும்புதூருக்கு வளர்மதி, காஞ்சீபுரத்துக்கு பொன்னையன் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் தேர்தலை சந்திக்க வசதியாக அதிமுக தலைமைக் கழகத்தின் சில நிர்வாகிகள், மாவட்ட, நகர, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் பலரையும் அவர் மாற்ற இருப்பதாகத் தெரிகிறது.
மேலும் மக்களவைத் தொகுதிகள் அனைத்திலும் வாக்குச்சாவடி தோறும் தேர்தல் பணிக் குழுக்களை உருவாக்கும் பணிகளை உடன துவக்குமாறும் அவர் மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுக்களை உருவாக்க தொகுதிவாரியாக நியமிக்கப்படும் பார்வையாளர்கள் உதவுவர்.
இதற்கிடையே தனக்கு மதுரை வேண்டாம், தென் சென்னை கொடுங்கள் என்று கேட்டு ஜெயலலிதாவை நச்சரித்த சுவாமியானவருக்கு சமீபத்தில் அதிர்ச்சி வைத்தியம் கிடைத்தது.
இன்னும் உங்களை கூட்டணியிலே சேர்ப்பதா இல்லையா என்று முடிவு செய்யவில்லை. அதற்குள் தொகுதியையே நீங்க டிசைட் பண்ணியாச்சா என்று கேள்வி கேட்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார் என்கிறார்கள்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications