திருவண்ணாமலை: சாமியார் கொலை-3 பேர் கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சாமியார் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் துர்வாசர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு எதிர் புறத்தில் 45 வயது மதிக்கத்தக்க சாமியார் ஒருவர் மரத்தில் பிணமாக தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரது உடல் முழுவதும் ரத்தக் காயங்கள் காணப்பட்டன. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் பிணத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், சாமியார் தலையில் கல்லால் அடித்து கொலை செய்து அவரது காவி வேட்டியிலேயே கழுத்தில் கட்டி மரத்தில் தொங்க விடப்பட்டது தெரிய வந்தது.
அவரது பிணம் தொங்கிய இடத்திற்கு அருகே ரத்தக் கறை படிந்த கற்களும், காலி மதுபான பாட்டில்களும் கிடந்தன.
கொலை செய்யப்பட்டவர் கிரிவலப்பாதையில் அண்ணாமலையார் பாதம் உள்ள இடத்தில் தங்கி இருந்த சாமியார் அனந்தகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமியாரை கல்லால் அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டதாக திருவண்ணாமலை அடுத்த ஆணாய்பிறந்தான் கிராமத்தை சேர்ந்த மேஸ்திரி குமார் (30), சங்கர் (27), சங்கரின் மனைவி சந்தியா ஆகியோரைக் கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications