பங்குச் சந்தையில் பசுமை - தொடருமா?
மும்பை: ஒரு கால வறட்சிக்குப் பின் இந்திய பங்குச் சந்தையில் இன்றுதான் பசுமை தென்பட்டுள்ளது. என்றாலும் இந்தப் போக்கு வாரம் முழுக்க தொடருமா என்பது சந்தேகம்தான். காரணம் உலகப் பெருமந்தம், மிகமிக மோசமான கட்டத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியிருக்கிறது.
மூன்று நாள் விடுமுறைக்குப் பின் இன்று திறந்த பங்குச் சந்தையின் துவக்கமே அமோகமாக இருந்தது. 10 நிமிடங்களில் 189 புள்ளிகள் அதிகரித்தன. பல நிறுவனங்களின் பங்குகளும் பரிவர்த்தனையில் இன்று நல்ல லாபம் பார்த்தன.
தேசிய பங்குச் சந்தையிலும் இன்று நல்ல உயர்வு காணப்பட்டது.
ஸ்டெர்லைட் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனப் பங்குகள் முறையே 14.24 மற்றும் 8.93 சதவிகிதம் லாபத்தில் கைமாறின.
விப்ரோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் 5 சதவிகித லாபத்தில் விற்பனையாகின.
ஓஎன்ஜிசி மற்றும் எல் அண்ட் டி பங்குகள்தான் இன்று ஓரளவு நஷ்டத்தைச் சந்தித்தன.
வர்த்தக நேர முடிவில் இன்று சென்செக்ஸ் 9004.08 (+329.73) புள்ளிகளாகவும், நிப்டி 2771.35 (+92.80) புள்ளிகளாகவும் நிலைபெற்றது.
இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமா என்பது சந்தேகமாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காரணம் இனி வரும் நாட்களில் வேலை இழப்புகள் பெருகி, சர்வதேசப் பொருளாதாரமே ஸ்தம்பித்துப் போகும் நிலை உள்ளதால், அது பங்குச் சந்தையையும் கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications