கருணாநிதி புலிகளிடம்தான் கோரிக்கை வைக்க வேண்டும்: ராஜபக்சே நக்கல்
கொழும்பு: போர் நிறுத்தம் ஏற்பட தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக தலைவர்கள் வன்னிக்கு சென்று அங்கிருக்கும் விடுதலைப் புலிகளிடம் ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு கோரிக்கை வைக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே நக்கலாக கூறியுள்ளார்.
இணையதளம் ஒன்றுக்கு இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழக முதல்வர் கருணாநிதி, அதிமுக தலைவர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக தலைவர்கள் வன்னி காட்டுக்கு சென்று அங்கு மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி பொதுமக்களை விடுவிக்குமாறு புலிகளிடம் கோரிக்கை விடுக்க வேண்டும்.
கருணாநிதி போர் நிறுத்த்ததை ஏற்படுத்த விரும்புவாரானால் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு சரணடையுமாறு புலிகளிடம் பகிரங்கமாக கோர வேண்டும். இலங்கை அரசாங்கமும் கருணாநிதியும் முன்மொழியும் ஒரு திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதை செய்ய முடியும்.
கருணாநிதி இலங்கை வரும்போது அவரோடு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களைக் கொண்ட ஒரு பிரதிநிதிகள் குழுவையும் கூட தன்னோடு கூட்டிவர முடியும். அப்பாவி தமிழ் மக்களை தமது இரும்பு பிடிக்குள் வைத்திருக்கும் புலிகளிடம் அவர்களை விடுவிக்குமாறு கோர வேண்டும்.
இலங்கையில் நடைபெறும் உண்மையான நிலவரங்கள் குறித்து தெரிந்துகொள்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தவறான வழிநடத்தல்களுக்கு தமிழகத் தலைவர்கள் செவிமடுக்க வேண்டாம் என்கிறார் ராஜபக்சே.












Click it and Unblock the Notifications