பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட மேட்டூர் அணை மூடப்பட்டது
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்: காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் வேளாண்மைப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டது.
கடந்தாண்டு ஜூன் 12ம் தேதி, காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காகத் மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது.
தற்போது, இங்கு வேளாண் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதனால் இனிமேல் பாசனத்திற்கு தண்ணீர் தேவை இருக்காது என்று விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டது.
தற்போது அணையின் அணையின் நீர் மட்டம் 63.28 அடியாக உள்ளது.












Click it and Unblock the Notifications