இலங்கையில் தமிழருக்குப் பாதுகாப்பான ஒரு இடமும் பாதுகாப்பில்லை - ஐ.நா.

இலங்கை வன்னிப் பகுதியில் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் எதிராக நடக்கும் கொடூரமான தாக்குதல்களை 48 மணிநேரம் நிறுத்துவதாகவும் அதற்குள் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தமிழர்கள் வெளியேறிவிட வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இலங்கையில் உள்ள ஐநா மனிதாபிமான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கார்டன் விஸ், இலங்கையில் தமிழர்களுக்குப் பாதுகாப்பான பகுதி என்று எதுவுமே இல்லாத நிலையில் அவர்கள் வெளியேறி எங்கே போவார்கள்? எனவே இந்தப் போர் நிறுத்தத்தை புலிகள் ஏற்பதற்கு வாய்ப்புகள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொழும்புவிலிருந்து தொலைபேசி மூலம் பேட்டி அளித்துள்ள கார்டன் விஸ் மேலும் கூறியுள்ளதாவது:
போர் நிறுத்தம் தொடர்பான அழைப்புகளுக்கு புலிகள் தரப்பில் இருந்து பதிலே இல்லை. அப்பாவி மக்களை விடுவிக்க 48 மணி நேரம் கெடு விதித்து இலங்கை அதிபர் அறிவித்துள்ள போர் நிறுத்தத்திற்கு புலிகள் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வன்னித் தமிழர்கள் இந்தப் போர் நிறுத்தத்தை எந்த அளவு வரவேற்பார்கள் என்றும் புரியவில்லை, என்றார்.
இதனிடையே போர் பகுதியில் உள்ள குழந்தைகள் மட்டுமே பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்படுவதாக ஐநா குழந்தைகள் அமைப்பான் யுனிசெப் அதிகாரி ஒருவர் வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் லட்சக்கணக்கான தமிவர்கள் ராணுவத் தாக்குதலில் சிக்கித் தவிப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள ஐநா மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை, அப்பாவி மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்பது இலங்கை அரசின் கடமை, அதை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications