இலங்கை சுதந்திர தினத்தன்று நார்வேயில் பிப். 4ல் தமிழர்கள் தீப்பந்தப் பேரணி

இந்த பேரணியில் வயது வித்தியாசமின்றி ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கலந்து கொண்டு, உறவுகளின் உயிர்காக்கவும் உரிமை மீட்கவும் உரத்துக் குரல் எழுப்புவோம் என நார்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
ஒஸ்லோவின் யங்ஸ்டார்கெட் என்ற இடத்தில், மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த தீப்பந்தப் பேரணி, நார்வே நாடாளுமன்றத்தின் முன்பாக நிறைவடையவுள்ளது.
இதுதொடர்பாக தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1948ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி, ஈழத் தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் கைகளில் பிரிட்டன் தாரை வார்த்த இருண்ட நாள்.
இந்த நாள், பௌத்த-சிங்கள பேரினவாத நாட்டின் 61 ஆவது ஆண்டு சுதந்திர நாள். தமிழ் மக்களுக்கு இது 61 ஆண்டு கால அடக்குமுறை வாழ்வு
இந்த நாளை கறுப்பு நாளாக அடையாளப்படுத்தி சிறிலங்கா அரச பயங்கரவாத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்துவோம்.
உடனடிப் போர் நிறுத்தத்திடக் கோரியும், தமிழின அழிப்பினை நிறுத்தவும், சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் ஒங்கிக் குரல் கொடுப்போம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
