தமிழக பந்த்: அரசுப் பணியாளர் சங்கம் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் பிப்ரவரி 4ம் தேதி நடத்தவுள்ள பந்த்தில், அரசுப் பணியாளர் சங்கமும் பங்கேற்கும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம், 4ம் தேதியன்று, தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் நடத்திடுமாறு அறைகூவல் விடுத்துள்ளது.
மேலும் 7ம் தேதி கருப்புக் கொடியுடன் பேரணியும் நடத்தப்படவுள்ளது.
இந்த இரு போராட்டங்களிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கமும் கலந்து கொள்வது என அச்சங்கம் முடிவெடுத்துள்ளது.
சங்கத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications