நிதி அமைப்புகளுக்கு சிறப்பு ரெபோ விகிதத்தில் ரிசர்வ் வங்கி நிதியுதவி

இதுகுறித்து ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளதாவது:
வங்கிகள் அல்லாத நிதி அமைப்புகளின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு சிறப்பு வட்டிவிகிதத் திட்டம் கடந்த அக்டோபர் 14ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி ரூ.20,000 கோடிவரை நிதி அமைப்புகளுக்கு சிறப்பு வட்டியில் கடன் வழங்கப்பட்டு வந்தது.
இப்போது சிறப்புச் சலுகையாக ரூ.59,020 கோடிக்கு நிதி வசதிகளை வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு வசதி நிதி அமைப்புகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்த தொகை சிறப்பு வட்டி விகிதத்தில் ஏல முறையில் வழங்கப்படும்.
இதன் மூலம் வங்கி அல்லாத நிதி அமைப்புகளின் நிதி ஆதாரம் வலுப்படும். மேலும் அதிக பணப் புழக்கமும், நுகர்வோர் பயன்பாடு மூலம் பொருளாதார நடவடிக்கைகள் உத்வேகம் பெறவும் இது உதவும், என்று கூறப்பட்டுள்ளது.
வெளிச் சந்தையிலிருந்து நிதி திரட்டலாம்:
அதேபோல அரசும் வங்கிகளும் வெளிச் சந்தையிலிருந்து நிதி ஆதாங்களைத் திரட்ட ரிசர்வ் வங்கி தாராளமாக அனுமதிக்கும் என்று அதன் துணை கவர்னர் ஷியாமளா கோபிநாத் தெரிவித்துள்ளார். இதற்காக ரிசர்வ் வங்கி வசமுள்ள அரசுப் பத்திரங்களை தனியார் வசமாக்கவும் ரிசர்வ் வங்கி அனுமதிக்கும் என்றார்.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புகள் வங்கிகள் அல்லாத நிதி அமைப்புகளுக்கு இது மிகப் பெரிய சலுகையாகக் கருதப்படுகிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
உங்களுக்கு அவசரப் பணத் தேவை இருந்தால் எங்களிடம் வாருங்கள்.. ஆர்பிஐ அவசர அழைப்பு.. யாருக்கு? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications