மருத்துவமனையில் 42 ஒப்பந்த பணியாளர்கள் நீக்கம்
நெல்லை: நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 42 பணியாளர்கள் நேற்று திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதார பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளில் மருத்துவமனை எவ்வளவோ விரிவாக்கம் செய்யப்பட்ட போதிலு்ம் கூடுதல் பிரிவுகள் துவக்கப்பட்ட போதிலும் கூடுதல் பணியாளர்கள் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக சுகாதார பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.
இவர்களுக்கு தொகுப்புதியமாக ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பந்த பணியாளர்கள் நோயாளிகளை வண்டியில் வைத்து தள்ளி செல்லுதல், துப்பரவு பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் டாக்டர்களுக்கு உதவியாக செயல்படுதல் ஆகிய பணிகளை செய்து வந்தனர்.
இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளமும் வழங்கப்படவில்லை. எனினும் என்றாவது ஒருநாள் பணி நிரந்தரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பணிக்கு வந்த ஒப்பந்த பணியாளர்கள் 42 பேரை திடீரென நீக்கிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஒப்பந்த பணியாளர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒப்பந்த பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஜினிமணி, துணை தலைவர் ராஜசேகர் மற்றும் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications