வரதட்சணை தந்த பெண்ணின் தந்தை மீது வழக்கு
மானாமதுரை: மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணை கொடுத்ததாக மணப்பெண்ணின் தந்தை மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை அருகே இடைய மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் கனிமொழி (25). இவருக்கும் மானாமதுரை சோம சுந்தரம் காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருளாழி என்பவருக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அப்போது மணமகனுக்கு ஒரு லட்சம் ரொக்கபணம், 45 பவுன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட் கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
இதற்கிடையில் 2008ம் ஆண்டு கூடுதலாக ரூ.1 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக மானாமதுரை போலீஸ் நிலையத்தில் கனிமொழி புகார் செய்தார்.
அதன் பேரில் அருளாழி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருமணத்தின்போது வரதட்சணை கொடுத்ததாக சுப்பிரமணியன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில், பெண்ணின் தந்தை மீது வழக்கு வரதட்சணை கொடுப்பது குற்றம் என்பதால் அதன் அடிப்படையில் சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மானாமதுரை கோர்ட்டில் ஆறுமுகம் மனு செய்தார்.
இதையடுத்து நீதிபதி ரவி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கலாவதி விசாரணை நடத்தி வரதட்சணை கொடுத்ததாக சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications