ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரி திமுக சார்பில் பிரமாண்ட மனித சங்கிலி
சென்னை ராயபுரம் சூரிய நாராயணன் தெருவில் தொடங்கி கிண்டி வரை இந்த மனிதச் சங்கிலி போராட்டம் இடம்பெற்றது.
உள்ளாட்சித் துறை அமைச்சரும், இளைஞர் அணிச் செயலாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் தயதாநிதி மாறன், ராஜ்யசபா திமுக எம்.பி. கனிமொழி, ஸ்டாலினின் மனைவி துர்கா, மகன் உதயநிதி, நடிகர்கள் நெப்போலியன், தியாகு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர்.
அண்ணாசாலை, மன்றோ சிலை, தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம், கிண்டி உட்பட பல்வேறு இடங்களுக்குச் சென்று அமைச்சர் ஸ்டாலின் மனித சங்கிலியைப் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் நாள்தோறும் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அவர்களை காப்பற்ற வேண்டும். அதற்காக இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி சார்பில் இளைஞர் சங்கிலி மாநிலம் எங்கும் நடைபெறுகின்றது.
இதில் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி மட்டுமல்லாமல் தமிழின உணர்வு படைத்த பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதனை ஏற்று இரு தரப்பினரும் ஆயுதங்களைக் கீழே போட்டு போர் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!













Click it and Unblock the Notifications