பள்ளியில் லேப்-டாப் திருடிய மாணவர்கள்
மதுரை: மதுரை அருகே படிக்கும் பள்ளியிலேயே கதவை உடைத்து லேப்-டாப் திருடிய நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை அருகே மேலுருக்கு பக்கத்தில் எஸ்.கல்லம்பட்டி என்ற கிராமம் உள்ளது. சமீபத்தில் இங்குள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு தமிழக அரசு மூன்று லேப்-டாப் கம்ப்யூட்டர்களை வழங்கியது.
தினமும் மாணவர்களுக்கு அதில் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் அதை தலைமை ஆசிரியரின் பீரோவில் வைத்து பூட்டிவிடுவர். இதே போல் சம்பவத்துக்கு முந்தைய வெள்ளி கிழமை வகுப்புகள் முடிந்து லேப்-டாப் பீரோவில் வைக்கப்பட்டது.
சனி, ஞாயிறு பள்ளி விடுமுறை முடிந்து திங்கட்கிழமை பள்ளி வந்த தலைமை ஆசிரியருக்கு அதிர்ச்சி. பீரோவை உடைத்து அதிலுள்ள லேப்-டாப்க்கள் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் மேலூர் போலீசில் புகார் செய்தார். போலீசாருக்கு பள்ளியில் இருக்கும் மாணவர்கள் சிலர் மேல் சந்தேகம் வந்தது.
அப்போது அதே ஊரை சேர்ந்த பிரபு என்ற 8ம் வகுப்பு மாணவரை போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த மாணவன் தானும் தனது நண்பர்களும் தான் திருடியதாக ஒப்புக்கொண்டான்.
லேப்-டாப்க்களை தங்களது வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பிரபு மற்றும் அவனது நண்பர்கள் வீரன், அருண் மற்றும் மாணிக்கம் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications