சீமானை நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவு
நெல்லை: இயக்குநர் சீமானை மார்ச் 6ம் தேதி நேரில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு நெல்லை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து கடந்த 17ம் தேதி நெல்லையில் வக்கீல்கள் சங்கம் சார்பில் பொதுகூட்டம் நடந்தது. இதில் டைரக்டர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் புதுச்சேரி போலீசாரும் சீமானை தேடி வந்தனர். இதையடுத்து நெல்லை போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா முன்னிலையில் அவர் சரணடைந்தார்.. நெல்லை போலீசார் அவரை புதுச்சேரி போலீசாரிடம் ஓப்படைத்தனர்.
இந்நிலையில் நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீ்மான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பாளை குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீமானை நெல்லை போலீசார் முறைப்படி கைது செய்தனர்.
நெல்லை நீதிமன்றத்தில் சீமானை ஆஜர்படுத்துமாறு கோரி பாளை குற்றபிரிவு போலீசார் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதை பொறுப்பு மாஜிஸ்திரேட் ஹேமா விசாரித்து மார்ச் 6ம் தேதி சீமானை நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்த உத்தரவு கடிதம் புதுச்சேரி துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications