நாடாளுமன்ற தேர்தல்: பாதுகாப்புக்கு 18 ஆயிரம் சிஐஎஸ்எப் வீரர்கள் தயார்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கு 150 கம்பெனிகளைச் சேர்ந்த 18 ஆயிரம் சிஐஎஸ்எப் வீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என சிஐஎஸ்எப் இயக்குனர் ஜெனரல் என்ஆர் தாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் என்ஆர் தாஸ் கூறுகையில்,
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்புக்காக 150 கம்பெனி வீரர்களை உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது. இதையடுத்து எங்களிடம் இருக்கும் 8 பட்டாலியன்களில் 6 பட்டாலியன்களில் உள்ள வீரர்களை பாதுகாப்புக்கு அனுப்பவுள்ளோம். மீதமுள்ள இரண்டு பட்டாலியன்களும் இயற்கை சீற்றங்கள் போன்ற திடீர் பிரச்சினைகளுக்காக தயார் நிலையில் வைக்கவுள்ளோம்.
தேர்தல் பணியில் அமர்த்தப்படும் வீரர்கள் தேர்தல் ஆணையத்தின் நேரடி உத்தரவின் பேரில் செயல்படுவர். தேர்தல் பூத்களை கவனிப்பது மற்றும் தேர்தல் பாதுகாப்பை மட்டுமே அவர்கள் கவனிப்பார்கள். நக்சல் பிரச்சினை உள்ளிட்டவற்றை மாநில போலீசார் தான் பார்க்க வேண்டும்.
ஐபிஎல் தொடருக்கு பாதுகாப்பு கொடுப்பது குறித்து யாரும் எங்களிடம் கேட்கவில்லை. அதனால் அது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது.
கடந்த மாதம் இன்டிகோ நிறுவன விமானம் கடத்தப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பின் அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையில் பொதுவான நடைமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைவருக்கும் இடையில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் என்ஆர் தாஸ்.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications