ஆந்திராவில் 94 - தமிழ்நாட்டில் 78% மக்கள் ஓட்டளிக்க பணம் வாங்குகிறார்கள்: சர்வே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தென் மாநில மக்கள் வாக்களிக்க பணம் வாங்குவதாகவும், இதில், வறுமை கோட்டுக்கு கீழே வாடும் மக்களில் ஆந்திராவில் 94 சதவீதமும், தமிழ்நாட்டில் 78 சதவீத மக்களும் வாக்களிக்க பணம் பெறுவதாக மீடியா ஆய்வுக்கான மையம் (சி.எம்.எஸ்.) நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த சி.எம்.எஸ். 19 மாநிலங்களில் இந்த ஆய்வை நடத்தியது. 2007ம் ஆண்டு வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் 28 ஆயிரம் பேரிடமும், 2008ம் ஆண்டு 18 ஆயிரம் வாக்காளர்களிடமும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தனவாம்.

கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள்தான் பெருமளவில் வாக்களிப்பதற்காக லஞ்சம் வாங்குகின்றனராம்.

மேலும், பாஜக ஆட்சி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் வாக்களிக்க பணம் வாங்குவது பெருமளவில் உள்ளதாம். அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் இந்த அளவுக்கு இல்லையாம்.

இடதுசாரிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் கூட வாக்களிக்க பணம் வாங்குகிறார்களாம் வாக்காளர்கள். நகரம், கிராமம், ஏழைகள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என வித்தியாசமே இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் பணம் வாங்குகின்றனராம்.

டெல்லியில் கூட 25 சதவீதம் பேர் வாக்களிக்க பணம் வாங்குகின்றனராம்.

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் 27 மற்றும் 25 சதவீதம் பேர் பணம் வாங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இவர்களுடன் ஒப்பிடும் போது காங்கிரஸ் (19) மற்றும் அதன் கூட்டணிகள் (21) ஆளும் மாநிலங்கள் பரவாயில்லை. இடதுசாரிகள் மற்றும் பகுஜன் சமாஜ் (13) ஆளும் இடங்களில் இது குறைவாக இருக்கிறது.

தேசிய அளவில் சாதாரண மக்கள் 22 சதவீத பேரும், வறுமைக்கு கோட்டுக்கு கீழே இருப்பவர்களி்ல் 37 சதவீத பேரும் பணம் வாங்கி வாக்களிப்பதாக கூறியுள்ளனர்.

ஆந்திரா நம்பர் ஒன்...

ஆந்திராவில் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களில் 94 சதவீதம் பேரும், தமிழ்நாட்டில் 78 சதவீதம் பேரும், கர்நாடகா மற்றும் ஜார்க்கண்டில் 73 மற்றும் அசாமில் 56 சதவீதம் பேரும் ஜனநாயக கடமையாற்ற தாங்கள் பணம் வாங்கும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.

வறுமை கோட்டுக்கு மேல் நல்ல நிலையில் இருப்பவர்களும் வாக்களிக்க பணம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது தேர்தலின் நோக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதில் கர்நாடகத்தில் 47 சதவீதம் பேரும், தமிழ்நாடு 34, மத்தியப் பிரதேசம் 33 மற்றும் ஆந்திராவிலும் பிகாரிலும் தலா 31 சதவீதமாக இருக்கிறது.

பெரிய மாநிலங்கள் வரிசையில் மகாராஷ்டிரா (13) மற்றும் குஜராத்தில்(24) லஞ்சம் வாங்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களில் 18 முதல் 35 வயதுள்ளவர்களில் 38 சதவீதம் பேர் தங்கள் கைகள் கரைபடிந்து விட்டதாக கூறியுள்ளனர். சாதாரண மக்களிடையே இதே வயதுடையவர்கள் பணம் வாங்குவது 22 சதவீதமாக இருக்கிறது.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களில் 44 சதவீதம் இத் தவறை செய்கின்றனர். இது சாதாரண மக்களிடையே 24 சதவீதமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+