தமிழர்களுக்கு உதவ 25 டன் மருந்துகள்-மருத்துவ குழு இலங்கை பயணம்

போர் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வேறு பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர். அவர்கள் மீதும் ராணுவத்தினர் தாக்குதல்களை தொடர்ந்து வருவதால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் காயமடைந்துள்ளனர்.
பட்டினியாலும், தொற்று நோய்களாலும், காயங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள இந்தத் தமிழர்களுக்கு இலங்கை அரசு எந்த உதவியும் செய்யவில்லை.
இதையடுத்து இந்த மக்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் உதவ அனுமதிக்க வேண்டும் என இலங்கையிடம் இந்தியா கோரியது. இந்த அனுமதி கிடைத்ததையடுத்து ரூ.7 கோடி மதிப்புள்ள மருந்து பொருட்கள் மற்றும் சிறப்பு மருத்துவ குழுவினரை நேற்று மாலை இந்திய விமானப் படையின் சரக்கு விமானத்தில் மத்திய அரசு அனுப்பி வைத்தது.
இந்தக் குழுவில் மருத்துவர்களுடன் அறுவை சிகிச்சை நிபுணர்களும் இடம் பெற்றுள்ளனர். 25 டன் மருந்து பொருட்களும், மருத்துவ உபகரணங்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இன்று இரண்டாம் கட்டமாக டெல்லியில் இருந்து புறப்படும் குழுவில் செவிலியர்கள், பரிசோதனைக்கூட ஊழியர்கள் செல்கின்றனர். அவர்களுடன் 25 டன் மருந்து பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மக்களுக்கு உதவ மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், தேர்தலும் வரவுள்ள நிலையில் இந்த மருத்துவப் பொருட்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications