மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ
செங்கோட்டை: புளியரை அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில் பல ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலாகியது.
புளியரை அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக அடிக்கடி காட்டுத்தீ பரவி வருகிறது. நேற்று புளியரை கற்குடியில் உள்ள காட்டுபகுதிகளில் தீ வேகமாக பரவியது.
நேரம் செல்ல செல்ல தீ உக்ரம் அதிகரித்து பல கிமீ சுற்றளவில் இருந்த அரிய வகை காட்டு மரங்கள், மற்றும் பல வகையான மூலிகை செடிகளை எரித்து சாம்பலாக்கியது.
இப்பகுதியில் கட்டு பன்றி, மிளா, மான்கள், கரடி, காட்டு எருமை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் காட்டு தீயில் இருந்து தப்பியோடின. வேகமாக தப்பி செல்ல முடியாத சில மலை பாம்புகள் தீயில் கருகின.
காட்டு தீயை அணைக்க வனத்துறையினர் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். இரவு நேரத்தில் மலை பகுதியில் கொளுந்து விட்டு எரிந்த தீ பல கி்மீ தூரத்திற்கு தெரிந்தது.
குன்னூரிலும் தீ:
அதே போல நீலகிரி மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால் அங்கும் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.
குன்னூர் அருகே உள்ள லேம்ஸ்லாக், டால்பின் நோஸ், கீழ்சிங்காரா, கீழ்அடார்லி, குரும்பாடி, சேம்புகரை ஆகிய பகுதிகளில் கடுமையான வறட்சியால் காட்டு தீ பரவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்த அபூர்வ ரக மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து வருகின்றன.
இந்த வன பகுதியில் இன்றும் 3-வது நாளாக தீப்பிடித்து எரிந்து வருகிறது. 1000 ஏக்கர் பரப்பளவுக்கு காட்டு தீ பரவியிருப்பதால் வன விலங்குகளும் தீயில் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தீ காரணமாக குன்னூர் நகர் முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications