நாஞ்சில் சம்பத்துக்கு நேற்று ஜாமீன் - இன்று தேசிய பாதுகாப்பு சட்டம்
திருப்பூர்: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத்தை திருப்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. ஆனால் இன்று திடீரென தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்ய திருப்பூர் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஒரு ஆண்டுக்கு சம்பத்தால் வெளி வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் சமீபத்தில் திருப்பூரில் நடந்த கருத்தரங்கில் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் தனக்கு ஜாமீன் வழக்குமாறு திருப்பூர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனு நேற்று திருப்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி ஹரிஹரக்குமார் விசாரித்தார்.
வக்கீல்கள் ஸ்டிரைக் காரணமாக சம்பத்தே தனக்காக ஆஜராகி வாதாடி, ஜாமீன் கோரினார்.
இதையடுத்து நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதில், ரூ. 2 லட்சத்துகான சொந்த ஜாமீன் பத்திரம் கொடுக்க வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை தினமும் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து திங்கள்கிழமை சம்பத் வெளியே வந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக சம்பத்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருப்பூர் கலெக்டர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
அதுதொடர்பான உத்தரவு இன்று கோவை மத்திய சிறைக்குப் போயுள்ளது. இதனால் சம்பத்தால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
ஏற்கனவே இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோருக்கும் தேசிய பாதுகாப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications