தேமுதிகவுக்கு காங் நேரடி அழைப்பு-வி.சி சிக்கல் நீடிப்பு
டெல்லி: தேமுதிக எங்களுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று காங்கிரஸ் நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியில் நீடிப்பதில் திமுக-காங்கிரஸ் இடையே சிக்கல் நீடிக்கிறது.
திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து தமிழக காங்கிரஸ் தேர்தல் குழுவினர் டெல்லியில் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், எம்பி ஞானதேசிகன் ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர்.
இவர்களும் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், இளங்கோவன், எம்பி பிரபு ஆகியோரும் காங்கிரஸ் தமிழக தேர்தல் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாதுடன் பேச்சு நடத்தினர்.
இரவு சுமார் 2 மணி நடந்க இந்தப் பேச்சுவார்த்தையின்போது பாமகவுடன் கூட்டணியை உறுதி செய்வது குறித்தும், விஜயகாந்த கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்தும் பேசப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்று தங்கபாலு, இளங்கோவன் ஆகியோர் இக் கூட்டத்தில் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய தங்கபாலு, சுதர்சனம் ஆகியோர்,
இன்றைய கூட்டத்தில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
மதவாத சக்திகளை முறியடிக்கும் வகையில், தேசிய நலனைக் கருத்தில் கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளும் காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அதன் அடிப்படையில், பாமக மற்றும் தேமுதிக ஆகியவை ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் நீடிப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, தமிழக காங்கிரஸ் தேர்தல் குழுவினர் சென்னை திரும்பியதும் அது குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார் தங்கபாலு.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications