இறங்கி வந்த அருண் ஜேட்லி-ராஜ்நாத்துடன் சந்திப்பு!
டெல்லி: பாஜகவில் மூத்த தலைவர்கள் அருண் ஜேட்லிக்கும் ராஜ்நாத் சிங்குக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.
வட கிழக்கு மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளராக மறைந்த பிரமோத் மகாஜனின் ஆதரவாளரான தொழிலதிபர் சுதான்சு மித்தலை நியமித்தார் கட்சியின் தலைவர் ராஜ்நாத். அவரை நீக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார் ஜேட்லி. இதை ராஜ்நாத் ஏற்க மறுக்கவே, பாஜகவின் தேர்தல் ஆய்வு கூட்டங்கள், வேட்பாளர் இறுதி செய்யும் கூட்டங்களை புறக்கணித்து வந்தார் ஜேட்லி.
ஜேட்லிக்கு மூத்த தலைவர் அத்வானியின் ஆதரவும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஆதரவும் உள்ளது. ஆனால், ராஜ்நாத் சிங்குக்கு சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு ஆகியோரின் ஆதரவு உள்ளது.
இந்த இரு தரப்பினரும் கட்சியில் யார் அதிகாரம் மிக்கவர்கள் என்ற போட்டியில் இறங்கினர். இதையடுத்து இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஆர்எஸ்எஸ் இறங்கியது.
இந் நிலையில் இன்று ராஜ்நாத் சி்ங்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் ஜேட்லி. இதையடுத்து பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
பாஜகவுக்கு திரும்பும் உமா:
இதற்கிடையே கடந்த சில நாட்களாக அத்வானிக்கு ஆதரவாகப் பேசி வரும் உமா பாரதி இன்று மீண்டும் பாஜகவுக்குத் திரும்புவதாகத் தெரிவிதுள்ளார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications