காங்.க்கு 1 தொகுதி கூட கிடைக்காது-விஜயசாந்தி

ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என நான் பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். இதற்காகதான் நான் தல்லி தெலுங்கானா என்ற கட்சியை தொடங்கினேன். தெலுங்கான மாநிலம் என்ற ஒரே பிரச்சினைக்காக தனித்தனியாக பிரிந்திருந்து குரல் கொடுப்பது நல்லதல்ல என்பதை கருத்தில் கொண்டு தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியில் இணைந்தேன்.
காங்கிரசார் பணம், பதவி வெறிபிடித்தவர்கள்...
கடந்த தேர்தலின் போது தெலுங்கானா தனி மாநிலம் அமைப்போம் என்று காங்கிரஸ் கட்சி உறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அதை மறுத்துவிட்டது.
காங்கிரசார் பணம், பதவி வெறிபிடித்தவர்கள். ஆந்திர மக்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு போதும் குரல் கொடுக்க மாட்டார்கள். காங்கிரஸ் மேலிடத்தின் அடிமைகளாகத்தான் இருப்பார்கள். தங்கள் மாநில மக்கள் வறுமையில் வாடினாலும், இன்னலுக்கு ஆளானாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ அதை மட்டும்தான் அக்கட்சி எம்.பி.க்களால் செய்ய முடியும்.
பச்சை துரோகி காங்கிரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்...
இதனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்தே தீருவோம். இதற்காக நான் மாநிலம் முழுவதும் சென்று தீவிர பிரசாரம் செய்வேன். காங்கிரஸ் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துவிட்டது.
எனவே இந்த தேர்தலில் ஆந்திராவில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்க கூடாது என்பதில் நாங்கள் மிக கவனமாக இருக்கிறோம். மக்களும் இதை மெல்ல மெல்ல புரிந்து வருகிறார்கள். தெலுங்கானாவுக்கு பச்சைத்துரோகம் செய்த காங்கிரசுக்கு தெலுங்கானா மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
மத்தியில் காங். அல்லாத அரசு...
என்னைப்பொறுத்த வரையில் எப்போதுமே பதவிக்கு ஆசைப்பட்ட தில்லை. அப்படி ஆசைப்பட்டிருந்தால் நான் பாஜகவிலே இருந்திருப்பேன்.
தெலுங்கானா தனி மாநிலத்திற்கு குரல் கொடுக்கத்தான் நான் பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினேன். இந்த முறை மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசு அமைய எங்கள் கூட்டணி பாடுபடும் என்றார் விஜயசாந்தி.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications