போலீஸ் மிரட்டல்-ஜீயரை மீட்க கோரியவர் புகார்
திருச்சி: ஸ்ரீரங்கம் ஜீயர் லட்சுமண் ராமானுஜ ஜீயரைக் கண்டுபிடித்துத் தரக் கோரி ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்த தன்னை மிரட்டி வருகிறார்கள் என வழக்கு தொடர்ந்த கோவிந்த ராமானுஜ தாசர் கூறியுள்ளார். இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடம் உள்ளது. நூற்றாண்டு பழமையும், பல கோடி ரூபாய் சொத்துக்களும் உள்ள இந்த மடத்தின் ஜீயர், ஸ்ரீலட்சுமண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் (83).
கடந்த 20ம் தேதி முதல் அவரைக் காணவில்லை. அவரை போலீஸார் கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரி கோவிந்த ராமானுஜ தாசர் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து தான் கொல்கத்தாவில் இருப்பதாக ராமானுஜ ஜீயர் போன் மூலம் தெரிவித்தார்.
இந் நிலையில், கோவிந்த ராமானுதாசர் இன்று காலை ஸ்ரீரங்கம் வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்ரீரங்கம் ஜீயர் மாயமானது தொடர்பாக உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளேன்.
கடந்த 11ம் தேதி மதுரை நீதிமன்றத்தில் ஜீயர் சுவாமியை ஆஜர்படுத்தப்போவதாக அறிந்து சென்றோம். ஆனால் சுவாமியை ஆஜர்படுத்தவில்லை. ஜீயர் சுவாமி உயிருடன் இருக்கிறாரா? என்றும் தெரியவில்லை. இதற்கிடையே இம்மனுவை வாபஸ் பெறக் கோரி ஸ்ரீரங்கம் போலீசார் என்னை மிரட்டுகின்றனர்.
சேது சமுத்திர திட்டத்தில் மாற்று வழிப் பாதைக்கும், தசாவதாரம் படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரியும் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து வெற்றி பெற்றேன்.
அதேபோல ஸ்ரீரங்கம் ஜீயர் மாயமான வழக்கில் மனுவை வாபஸ் பெறச் சொல்லி போலீசார் மிரட்டுவதால் டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனுவை தாக்கல் செய்யப் போகிறேன் என சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் தெரிவித்துள்ளார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications