மன்மோகன் சிங் தேர்தலில் போட்டியிடட்டுமே பார்ப்போம் - அத்வானி சவால்
செபா (அருணாச்சலப் பிரதேசம்): அடுத்த பிரதமரும் மன்மோகன் சிங் தான் என்று காங்கிரஸ் கூறியிருப்பதை வரவேற்கிறோம். அதேசமயம், மன்மோகன் சிங் ராஜ்யசபா வழியாக பிரமதர் ஆகாமல், லோக்சபா தேர்தலில் போட்டியிட முன்வர வேண்டும் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி சவால் விட்டுள்ளார்.
அருணாச்சலப் பிரதேச மாநிலம் செபா என்ற இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் அத்வானி. அப்போது அவர் கூறுகையில், தங்களது கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை ஒரு வழியாக சோனியா காந்தி அறிவித்து விட்டார். அதை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால் பிரதமராகக் கூடியவர் மக்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவராக இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டுமானால் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்களின் ஆதரவுடன் எம்.பி. ஆகி நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும்.
எனவே மன்மோகன் சிங்கும், ராஜ்யசபா வழியாக பிரதமர் பதவிக்கு வராமல், லோக்சபா தேர்தலில் போட்டியிட முன்வர வேண்டும். மக்களின் ஆதரவுடன் அவர் வெல்ல முன்வர வேண்டும்.
அமெரிக்காவில் இருப்பதைப் போல பல்வேறு பிரச்சினைகள் குறித்து டிவி மூலமாக பொது விவாதம் நடத்த, நேருக்கு நேர் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். பிரதமர் தயாரா என்பதை அவர் சொல்ல வேண்டும்.
நமது நாடு இதுவரை கண்ட பிரதமர்களிலேயே மிகவும் பலவீனமானவர் மன்மோகன் சிங்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. 10 ஜன்பாத் இல்லத்திலிருந்து (சோனியாவின் வீடு) பச்சைக் கொடி காட்டாமல் எந்த முடிவையும் அவரால் எடுக்க முடியாது.
பிரமர் அலுவலகத்தில் உள்ள ஒரு அமைச்சர் பிரதமரின் திட்டங்கள், முடிவுகளை சோனியாவிடம் கொண்டு சென்று அவரது ஒப்புதலைப் பெற்ற பிறகே அவற்றை பிரதமரால் அறிவிக்க முடிகிறது. சோனியா காந்தியின் ஒப்புதல் இல்லாமல் மன்மோகன் சிங்கால் நகரக் கூட முடியாது.
கெளடாவை விட மன்மோகன் மோசம் ..
லோக்சபா எம்.பியாகி, பிரதமரான தேவே கெளடா கூட நிறைய அதிகாரங்களை கையில் வைத்திருந்தார்.
வட கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் எதிர்ப்பு சக்திகளை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பி.ஏ.சங்மா திரட்டி வருகிறார். இதை நான் வரவேற்கிறேன் என்றார் அத்வானி.
முன்னதாக அஸ்ஸாம் மாநிலம் தின்சுகியா நகரில் நடந்த கூட்டத்தில் அத்வானி பேசுகையில், இப்போதுதான் பாமக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விட்டுப் போய் விட்டதாக எனக்குத் தகவல் கிடைத்தது. நாளுக்கு நாள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பலவீனமடைந்து வருகிறது. நாங்கள் பலம் பெற்று வருகிறோம்.
காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதற்காக அஸ்ஸாம் கண பரிஷத் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து வருகிறது என்றார் அத்வானி.
எப்படி நாட்டுக்குத் தலைமை தாங்குவார்?:
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் வி.கே.மல்ஹோத்ரா டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், தேர்தலில் போட்டியிடவும் முடியாது. டிவி ஸ்டேஷனுக்கு வந்து அத்வானியுடன் விவாதம் புரியவும் முடியாது. கேட்டால், பிரதமரின் உடல் நிலையாக் காரணம் காட்டுகிறார்கள்.
டிவி ஸ்டேஷனுக்கு வந்த விவாதமே நடத்த முடியாத ஒருவர் நாட்டை எப்படி தலைமை தாங்கி நடத்த முடியும். எப்படி அவரால் பிரதமராக செயல்பட முடியும்.
தனது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே மன்மோகன் சிங் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். அதிலும் கூட தோற்றுப் போய் விட்டார் என்றார் மல்ஹோத்ரா.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications