பாலிஷ் போடுவதாக நகை திருட முயன்ற கும்பல்
அம்பை: அம்பை அருகே தங்க நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக கூறி அவற்றை திருட முயன்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
அம்பை அருகே தெற்கு பாப்பான்குளத்தை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகள் பேச்சியம்மாள். இவரது கணவர் அருள்ராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து பேச்சியம்மாள் தனது தந்தை வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 10 பேர் கொண்ட கும்பல் இருபிரிவாக பிரி்ந்து தெற்கு பாப்பன்குளத்திற்குள் நுழைந்துள்ளது. அங்கு வீடு வீடாக சென்று தங்கம், வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறியது.
அந்த கும்பலில் இருந்த 6 பேர் பேச்சியம்மாள் வீட்டிற்கு சென்று ரூ. 25க்கு நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து பேச்சியம்மாள் தனது வெள்ளி கொலுசுக்கு பாலிஷ் போட கொடுத்துள்ளார். கொலுசை பாலிஷ் போட்டு கொடுத்துவிட்டு அந்த கும்பல் பேச்சியம்மாள் கழுத்தில் கிடந்த 10 கிராம் எடையுள்ள தங்க செயினை கேட்டுள்ளனர். பேச்சியம்மாளும் செயினை கழற்றி கொடுத்துள்ளார்.
அப்போது அந்த கும்பல் ஒரு கோப்பையில் ஆசிட் கலந்த கலவையை ஊற்றி தங்க செயினை போட்டுள்ளனர். அப்போது செயின் 2 கிராம் எடையுள்ள துகள்களாக உருகி விட்டது. அந்த துகள்களை பேச்சியம்மாளிடம் கொடுத்துவிட்டு அந்த கும்பல் ஓடமுயன்று உள்ளது. அப்போது பேச்சியம்மாள் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து 6 பேரையும் பிடித்தனர்.
இதுபோல் பக்கத்து தெருவில் முருகன் என்பவரது வீட்டில் பாலிஷ் போட்ட மற்றொரு 4 பேர் கொண்ட கும்பலும் ஓடமுயன்றது. அவர்களையும் பிடித்து கல்லிடைக்குறிச்சி போலீசில் ஓப்படைத்தனர். இதையடுத்து எஸ்பி ஆஸ்ரா கார்க் உத்தரவுபடி அம்பை டிஎஸ்பி ராஜமோகன், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் அக்பர்கான் ஆகியோர் பிடிபட்ட 10 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பீகார் மாநிலம் சிப்போல், மதுரா மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார், அப்புகுமார், தேவஷா, ஸ்ரீகாந்தஷா, பவன்குமார்ஷா, சுரேன்குமார், பாபுகுமார், சந்தனகுமார், விபேத் தர்ஷா, லலித்குமார் சர்மா, ஆகிய 10 பேர் என்பது தெரிந்தது. அவர்களிடம் பாலிஷ் போட பயனபடுத்திய பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications