ஈழத்தை ஆதரிக்கும் கட்சிகளுடன் கூட்டணி- விஜய டி ராஜேந்தர்
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில், தனித்த தமிழ் ஈழத்தை ஆதரிக்கும் கட்சிகளுடன் தனது கட்சி கூட்டணி அமைக்க இருப்பதாக லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
டி ராஜேநதரின் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நேற்று 29ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
அதில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்தும், நம் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை தலைவர் விஜய டி.ராஜேந்தருக்கு இந்த பொதுக்குழு முழு மனதோடு வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் டி ராஜேந்தர் பேசுகையில்,
இலங்கையில் வாடும் அப்பாவி தமிழர்களை கை கழுவியவர்களை, தமிழ்நாட்டு மக்கள் கை கழுவுவார்கள். காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டுபோன கதையாக, இலங்கை தமிழர்கள் விஷயத்தில் நேற்று வரை கைகட்டி வாய் பொத்திக் கொண்டிருந்தவர்கள் வெற்றியைத் தட்டிப் பறிக்கப் பார்க்கிறார்கள்.
பிராய்ச்சித்தம் தேடுங்கள்...
காங்கிரசுக்கும், கருணாநிதிக்கும் ஒரு கோரிக்கை. காலம் கடந்தாவது தேடுங்கள் பிராயச்சித்தம். இனிமேலாவது செய்யுங்கள் இலங்கையில் போர் நிறுத்தம். பிரதமர் மன்மோகன்சிங், கருணாநிதிக்கு கடிதம் எழுதினால் போதாது, இலங்கை மண்ணில் இருக்கும் எம் தமிழர்கள் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். இல்லையேல் எதிர்விளைவுகளை சந்தித்தே தீர வேண்டும்.
தமிழீழ பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தனித் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும். இந்த கருத்துகளோடு ஒத்த கருத்துகள் உள்ளவர்களிடம் மட்டுமே லட்சிய திமுக கூட்டணி வைத்துக்கொள்ளும் என்றார் டி ராஜேந்தர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications